பிப்ரவரி முதல் வாரத்தில் ‘விஜய் 67’ அப்டேட்: லோகேஷ் கனகராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

கோவை: எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 67’ அப்டேட் கிடைக்கும் என அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மைக்கேல் பட புரொமோஷனில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகி உள்ளது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அதற்கு காரணம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த ‘மாஸ்டர்’ பட வெற்றிதான். அதே போல கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ படமும் வெற்றி பெற்றது. அதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் செல்லும் இடம் எல்லாம் இது குறித்து கேட்பது வழக்கமானது. அவரும் முடிந்தவரை அதில் தனது மவுனத்தை காத்து வந்தார். வாரிசு வெளியான நிலையில் விரைவில் அப்டேட் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மைக்கேல் பட புரொமோஷனில் லோகேஷ் கலந்து கொண்டார். “சின்ன ஹிண்ட் மட்டும் கொடுக்குறேன். எல்லாரும் நியாபகம் வெச்சுக்கோங்க. பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அப்டேட் கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்