“வாழ்க்கை நிச்சயமற்றது” - உதவி இயக்குநர் மறைவு குறித்து ஷாந்தனு உருக்கம்

By செய்திப்பிரிவு

உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள நடிகர் ஷாந்தனு ‘வாழ்க்கை நிச்சயமற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதவி இயக்குராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணா பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார். அந்தப்பதிவில், “நேற்றிரவு ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குநர். 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்றுவிட்டார். அவர் வேலையின் போது இறந்துவிட்டார்.

வாழ்க்கை நிச்சயமற்றது. வாழ்க்கை நியாயமற்றது... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு கால அவகாசம் கூட வழங்கப்படவில்லை. கீழே விழுந்து அவர் சில நிமிடங்களில் இறந்துவிட்டார். மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு என்னை அழைத்து இருந்தார். என்னால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை. நான் அவனுடைய போனை எடுத்திருக்க வேண்டும்.

நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ வெறுப்பு அல்லது கோபம் இருந்தால் மறந்து விடுவோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம். யார் மீதாவது வெறுப்பை வீசுவதற்குள் பதிலாக புன்னகையைப் பரப்புவோம். மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சிப்போம். இன்றைய உலகின் மிகப்பெரிய குற்றவாளி அதுதான்.

''என்ன சார் இருக்கு இந்த உலகத்தில், அவ்வளவு எதிர்மறை, வெறுப்பு. அதற்கு பதிலாக மகிழ்ச்சியாக இருங்கள், அன்பைப் பரப்புங்கள், அதற்கு எந்தச் செலவும் இல்லை” அதுதான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒன்று” எனக் குறிப்பிட்டு உள்ளார். தெலுங்கு திரையுலகில் இளம் நடிகரான சுதீப் வர்மா நேற்றைய தினம் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE