லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’ படத்தில் ஃபஹத் ஃபாசில்?

By செய்திப்பிரிவு

‘விஜய் 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளது’ என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மலையாளத்தில் வெளியாக உள்ள ‘தங்கம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துகொண்ட ஃபஹத் ஃபாசிலிடம், ‘நீங்கள் விஜய் 67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘விக்ரம்’ படத்தில் உங்கள் அமர் கதாபாத்திரத்திற்கு தனிப் படம் வருமா?’ எனவும் கேட்கப்பட்டது. இதற்கு, ‘அதற்கான வாய்ப்பிருந்தால் அதை இயக்குநரே முடிவு செய்து தெரிவிப்பார்’ எனவும் ஃபஹத் ஃபாசில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்