ரூ.2,200 வரை விற்கப்படும் ஷாருக்கானின் ‘பதான்’ டிக்கெட்டுகள் - சூடுபிடித்துள்ள முன்பதிவு

By செய்திப்பிரிவு

ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘பதான்’ படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஐமேக்ஸ் 2டிக்கான டிக்கெட்டுகள் 2,200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மும்பையில் 200 ரூபாய்க்கு தொடங்கி ரூ.1450 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மும்பையில் சில திரையரங்குகள் ஒரு நாளைக்கு 15 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் பெரிய திரையில் ‘பதான்’ படத்தின் முன்பதிவு தொடங்கியதும் 120 நிமிடங்களுக்குள் 18,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டிக்கெட் முன்பதிவு தொடர்பாக பிவிஆர் சிஇஓ கமல் கியான்சந்தனி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிட்டுக்கு பிறகு இப்படியான முன்பதிவு நடைபெற்றதில்லை” என பதிவிட்டுள்ளார். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்