ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா வில்லன்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சுனிலும் இதில் இணைந்துள்ளனர். இவர் ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனு என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். பான் இந்தியா முறையில் ‘ஜெயிலர்’படம் உருவாகிறது என்பதால், ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர்களை நடிக்க வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE