அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள சிரஞ்சீவியின் புது கெட்டப் இணையத்தை கலக்கி வருகிறது.
சங்கராந்தி பண்டிகையையொட்டி சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3 நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.108 கோடி வசூலுடன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சூட்டோடு சூடாக நடிகர் சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்க உள்ள படம் ‘போலா சங்கர்’ (Bholaa Shankar). கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பில் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல ஸ்ருதி ஹாசனுக்கு பதிலாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான சிரஞ்சீவியின் கெட்டப் சமூக வலைளதங்களில் வைரலாக பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago