லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’ படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ ஜனனி?

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படத்தைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’ பட கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. அதேபோல 'திருப்பாச்சி', 'கில்லி', 'ஆதி', 'குருவி' படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. மேலும், இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிப்பதை அண்மையில் உறுதி செய்தார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்