இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் ஜூனியர் என்டிஆர் - வைரலாகும் புகைப்படங்கள்

By செய்திப்பிரிவு

நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது மற்றும் சர்வதேச அரங்கில் சிறப்புத் திரையிடல்களால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு. இந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் திரும்பியிருக்கிருக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளார்.

ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்திருக்கும் புகைப்படங்கள்தான் அந்த சர்ப்ரைஸ். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்மையில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. நாளை ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து ‘ஆர்ஆர்ஆர்’ படம் பெற்றிருக்கும் விருதுகளுக்காக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அண்ணா. கோல்டன் குளோப் விருதை ‘ஆர்ஆர்ஆர்’ வென்றதற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்