அழுத்தமான வசனங்களுடன் கவனம் பெறும் சசிகுமாரின் ‘அயோத்தி’

By செய்திப்பிரிவு

சசிகுமார் நடித்துள்ள ‘அயோத்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? ஒரு இறப்பு. அதைச்சுற்றி நடக்கும் கதையாக ‘அயோத்தி’ உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரம் பேசும் ‘மதராசி’ வசனமும் அதற்கான எதிர்வினையும் ஹைலைட். ‘ஒருத்தன் மதத்துக்காக சண்ட போட்றானா அவனுக்கு கடவுள்னா என்னன்னு புரியலன்னு அர்த்தம்’, ‘மதம்ங்குறது மனிசனுக்குத்தான் கடவுளுக்கில்லை’ போன்ற வசனங்கள் படத்தின் தன்மைக்கு சான்றளிக்கின்றன. ட்ரெய்லரின் இறுதிக்காட்சியும் வசனமும் கவனம் பெறுகின்றன.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்