சினிமாவாகும் ஜெயசுதா வாழ்க்கை கதை

By செய்திப்பிரிவு

நடிகை ஜெயசுதா, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், பாலசந்தர் இயக்கிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அரங்கேற்றம்’, ‘நான்அவனில்லை’, ‘அபூர்வராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், இப்போது அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

‘வாரிசு’ படத்தில் விஜய் அம்மாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் விழாவுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் ஜெயசுதா வந்திருந்தார். இதனால், தனது 64 வயதில் அவர் 3வது திருமணம் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார். “என்னுடன் வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெலிப் ரூவல்ஸ். இவர் என் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார். எனது முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ள சினிமா விழாக்களுக்கு வருகிறார். மற்றபடி ஏதுமில்லை” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்