பாலகிருஷ்ணா நடிப்பில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டர் வீரய்யா’ படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் வசூல் நிலவரங்கள் குறித்து பார்ப்போம்.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. சங்கராந்தி பண்டிகையையொட்டி ஜனவரி-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், ஷ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷனை அடிப்படையாக கொண்டு ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் மட்டும் உலக அளவில் ரூ.54 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது. இரண்டாம் நாள் வசூலையும் சேர்த்து படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை நெருங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் பாபி கோலி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. ரவிதேஜா, பாபி சிம்ஹா, ஸ்ருதி ஹாசன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், நாசர், கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் நேற்று (ஜனவரி 13) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
» வாரிசு Vs துணிவு - மூன்று நாள் முடிவில் வசூலில் முந்துவது எது?
» வால்டர் வீரய்யா Review: சிரஞ்சீவி, ரவி தேஜா கூட்டணி எடுபட்டதா?
இந்நிலையில், இந்தப் படம் முதல் நாள் உலக அளவில் ரூ.25-30 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது. படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago