வாரிசு Vs துணிவு - மூன்று நாள் முடிவில் வசூலில் முந்துவது எது?

By செய்திப்பிரிவு

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் உலக அளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் ‘துணிவு’ உலக அளவில் ரூ.93 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. மேலும், தமிழகத்தில் அஜித்தின் ‘துணிவு’ சற்று அதிக திரையரங்குகளில் திரையிடபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை ‘துணிவு’ வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியானது. இதையடுத்து படம் 3 நாட்களில் படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் படம் ரூ.93 கோடியை வசூலித்துள்ள ‘துணிவு’ நாளை ரூ.100 கோடி க்ளப்பில் நுழையும் என கணிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் 3 நாட்கள் முடிவில் படம் ரூ.49 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனவும், உலக அளவில் படம் ரூ.100 கோடியை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE