ட்ரோல் ஆன ஜூனியர் என்டிஆரின் ‘அமெரிக்க’ உச்சரிப்பு - குல்ஷன் தேவய்யா ரியாக்‌ஷன்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நடிகர் ஜூனியர் என்டிஆரின் உச்சரிப்பை நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்திருந்தனர். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக மற்றொரு நடிகரான குல்ஷன் தேவய்யா குரல் கொடுத்துள்ளார். இது குறித்து ட்விட்டர் தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

நேற்று ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றிருந்தார் ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தை கொண்டாடும் வகையில் அந்தப் படத்தின் படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருந்தனர். இதில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் அடங்குவர்.

அப்போது ஊடகங்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஜூனியர் என்டிஆர் பதில் அளித்திருந்தார். அதன்போது அவரது உச்சரிப்பு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதனால் அவரை நெட்டிசன்கள் சிலர் ட்ரோலும் செய்தனர். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக குல்ஷன் தேவய்யா ரியாக்ட் செய்துள்ளார்.

“ட்ரோல் செய்யும் அளவுக்கு ஜூனியர் என்டிஆரின் உச்சரிப்பு ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. இதுவொரு பிஆர் ஸ்ட்ரேட்டிஜி. இதனை ஈஸியாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தனது சிறகுகளை விரித்து பறக்க விடுங்கள். அவர் ஹாலிவுட் சினிமா மார்க்கெட்டை பிடித்தால் அது இந்திய சினிமாவுக்கு நல்லது. அதன் மூலம் அனைவரும் ஆதாயம் பெறலாம்” என ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்