“ஆக்‌ஷன் படங்களில் அஜித் வேறு மாதிரி” - ‘துணிவு’ குறித்து மஞ்சு வாரியர் ஷேரிங்ஸ்

By செய்திப்பிரிவு

‘அஜித் தான் எனக்கு துப்பாக்கிகளை கையாளுவது குறித்து கற்றுக்கொடுத்தார்’ என ‘துணிவு’ படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை மஞ்சு வாரியர், “பல விதங்களில் எனக்குப் புது அனுபவமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் அஜித்துடன் முதல் முறையாக நடித்திருக்கிறேன். அதுவும் ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தில் இவர்களுடன் இணைந்தது எனக்கு முற்றிலும் புது அனுபவம். ஏனென்றால் இதுபோன்ற ஆக்‌ஷன் படம் எதுவும் இதற்கு முன்பு நடித்ததில்லை. ‘துணிவு’ படத்தில் நடித்ததை ஒரு கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே பார்க்கிறேன்.

தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் இப்படத்தில் நடித்ததை அணுவணுவாக ரசித்துச் செய்தேன். இதையெல்லாம் விட இன்னொரு ‘முதல் முறை’ என்கிற அனுபவத்தையும் ‘துணிவு’ எனக்குக் கொடுத்துள்ளது. அது என்னவென்றால்... இவ்வளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் படத்தில் நான் நிஜமாகவே முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

துப்பாக்கிகளை நுணுக்கமாகக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற ஒரு பெண் கதாபாத்திரம். சினிமாவில் பார்த்து துப்பாக்கிகளை எப்படிப் பிடிக்கவேண்டும் என்று தெரியும். ஆனால், துப்பாக்கிகளை நுணுக்கமாகக் கையாளும் ஒரு பெண் என்று வரும்போது அதில் தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா? அதுதான் எனக்குச் சவாலாகிவிட்டது. அந்த இடத்தில் அஜித் தான் எனக்கு மிகப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார்.

அவர் இனிமையான மனிதர் என்பதை அறிவேன். அதேபோல், ஆக்‌ஷன் படங்களில் எப்படி ஸ்டைல் காட்ட முடியும் என்பதில் அஜித் வேறு மாதிரி என்பதையும் இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆக்‌ஷன் காட்சிகளைப் பொறுத்தவரை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இருந்தாலும் பாங்காக் படப்பிடிப்பின்போது அந்த நாட்டைச் சேர்ந்த ஆக்‌ஷன் டைரக்டர்களும் உடன் இருந்து உதவி செய்தார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்