15 நாட்களில் ரூ.100 கோடி - மாஸ் காட்டும் ரவி தேஜாவின் ‘தமாகா’ வசூல்!

By செய்திப்பிரிவு

ரவி தேஜா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தமாகா’ தெலுங்கு திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா இரட்டை வேடங்களில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘தமாகா’ (Dhamaka). ஆக்‌ஷன், காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, ஜெயராம், சச்சின் கெடேகர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம், கிறிஸ்துமஸை ஒட்டிய கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 10 நாட்களில் ரூ.89 கோடியை வசூலித்த படம், 15 நாட்களில் ரூ.101 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரவி தேஜா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE