> அஜித் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான ஸ்டார் நடிகர் நடிக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
> நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்த்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
> ‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கைக்கோக்கிறார். ‘ஏகே 62’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் அரவிந்த் சுவாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நாயகி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. த்ரிஷா நடிப்பார் என்ற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago