“நான் நலமுடன் இருக்கிறேன்” - வதந்திகளுக்கு நடிகர் விமல் முற்றுப்புள்ளி

By செய்திப்பிரிவு

நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமல். தொடர்ந்து 'கிரீடம்', 'குருவி', 'பந்தயம்', 'காஞ்சிவரம்' உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். இதன் பின் 'களவாணி', 'வாகை சூட வா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா','தேசிங்கு ராஜா','ஜன்னல் ஓரம்', 'புலிவால்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் விமர் நடிப்பில் வெளியான 'விலங்கு' இணைய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனையறிந்த விமலின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நலமுடன் படப்பிடிப்பிலிருந்து’’ என பதிவிட்டு படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்