ஜன.11-ல் வெளியாகிறது விஜய்யின் ‘வாரிசு’

By செய்திப்பிரிவு

ஜனவரி 11-ம் தேதி விஜய்யின் ‘வாரிசு’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 11ம் தேதி (ஜன.11) வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அஜித் நடிக்கும் துணிவு படம் ஜன.11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படம் ஒருநாள் தள்ளி ஜனவரி 12ல் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது 11ம் தேதியே வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு அஜித் விஜய் திரைப்படம் நேரடியாக பொங்கல் பண்டிகைக்கு மோதுகிறது.

கடைசியாக 2014 பொங்கல் பண்டிகையின்போது அஜித்தின் வீரமும், விஜய்யின் ஜில்லா திரைப்படங்கள் மோதின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE