மும்பை: நடிகர் சல்மான்கானைப்பார்க்க மத்தியப்பிரதேசத்திலிருந்து மும்பைக்கு 1,100 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்துள்ள ரசிகர் ஒருவரின் செயல் பேசுபொருளாகியுள்ளது. இறுதியில் சல்மான் கானுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தீவிர ரசிகர் சமீர். மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சமீருக்கு சல்மான் கானை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அதற்காக அவர் தனது வீட்டிலிருந்து சல்மான் கானின் வீடு அமைந்துள்ள மும்பைக்கு கிட்டத்தட்ட 1,100 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து சென்றிருக்கிறார்.
அதிர்ஷ்டவசமாக சல்மான்கான் வீட்டிலிருக்க இறுதியாக சல்மானைச் சந்தித்த சமீர் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தனது சைக்கிளில் சல்மான்கானின் புகைப்படத்தை மாட்டியிருக்கும் சமீர், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் கூறியுள்ளார். மேலும் சல்மான்கானுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago