விஜய்யின் 'வாரிசு' பட ட்ரெய்லர் புதன்கிழமை ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் நாளை (புதன்கிழமை) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி உள்ளார். படத்திற்கான பாடல்கள் மற்றும் வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீடு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த சூழலில் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ்: இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் ரன் டைம் சுமார் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என தகவல் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE