திரைத் துறை தெறிப்புகள் | அஜித்தின் ‘துணிவு’ டிரெய்லர் சாதனை

By செய்திப்பிரிவு

> அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் ‘துணிவு'. இருவரும் இணைந்துள்ள 3 வது படம் இது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வரும் 12-ம்தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் இரவு வெளியானது. சில நிமிடங்களிலேயே, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட இந்த டிரெய்லர், இப்போது 2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருவதாகத் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

> துபாய் தொழிலதிபர் ஆசிப் அலியை திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா, தாய்மை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

> ‘இந்த புதிய வருடத்தில், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் தொடர்ந்து மகிழ்விப்பேன்’ என்று தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

> ‘அவதார்' படத்தின் 2-ம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இதில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், ஸ்டீபன் லாங் உட்பட பலர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிச.16-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ வசூலை இந்தப் படம் தாண்டி விடும் என்கிறார்கள். ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ இந்தியாவில், ரூ.373 கோடி வசூல் செய்திருந்தது. ‘அவதார் 2’ இந்த வாரம் அந்த வசூலை முறியடிக்கும் என்கிறார்கள். அதற்கு இன்னும் ரூ.40 கோடி மட்டுமே தேவை என்றும் கூறுகிறார்கள்.

> புத்தாண்டை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள், ஒவ்வொரு வருடமும் அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த வருடமும், ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு நேற்று காலையில் குவிந்தனர். ரஜினியின் வாழ்த்துக்காகக் காத்திருந்தனர். அப்போது திடீரென வீட்டில் நின்றபடியே நடிகர் ரஜினிகாந்த், கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினி, இப்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்