ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீடு - நடிகை போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

மலையாள நடிகையான பிரவீனா, தமிழில் ‘வெற்றிவேல்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கோமாளி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ராஜா- ராணி’, ‘பிரியமானவள்’ உட்பட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக அளித்தப் புகாரை அடுத்து கடந்த வருடம் பாக்யராஜ் என்ற மாணவரை, போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரவீனா மகளும் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுபற்றி பிரவீனா கூறும்போது, “நான் போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த நபர் செயல்பட்டு வருகிறார். என் மகள், அம்மா, சகோதரி, நண்பர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு வருகிறார். இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா?” என்று கேட்டுள்ள நடிகை பிரவீனா, தனது மகளும் சைபர் கிரைமில் இதுபற்றி புகார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்