அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் நாளை (டிச.31) இரவு 7 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் கதையில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பெயர்களை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: அஜித்தின் ‘துணிவு’ பட கதாபாத்திரங்கள் - ஆல்பம்

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான்.

இந்தப் படத்தின் பாடல்களை படக்குழு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகிறது. படக்குழுவின் இந்த அறிவிப்பை அஜித் மற்றும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்