“ஒரு நல்ல மகனை வளர்த்தார்” - பிரதமர் மோடியின் தாயாருக்கு பாலிவுட் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தக் கடினமான நேரத்தில் கடவுள் நரேந்திர மோடிக்கு அமைதியைத் தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாயை இழப்பதை விட பெரிய துன்பம் இல்லை. இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை இறைவன் தரட்டும்” என பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் ட்விட்டர் பக்கத்தில், “மோடியின் தாயார் மறைவுக்கு எனது இதயபூர்வமான இரங்கல்கள். ஹீராபென் மோடி. ஓர் எளிய, கொள்கைப் பெண்மணி, அவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என ஒரு நல்ல மகனை வளர்த்தார். ஓம் சாந்தி. பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அனுபம் கெர், “மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி! உங்கள் தாயாரின் மறைவு பற்றி கேள்விப்பட்டு, வருத்தமடைந்தேன். அவர் மீதான உங்கள் அன்பும் மரியாதையும் உலகில் தெளிவாகத் தெரிகிறது. உங்கள் வாழ்க்கையில் அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், நீங்கள் பாரத அன்னையின் மகன்! நாட்டின் ஒவ்வொரு தாயின் ஆசிர்வாதமும் உங்களுக்கு உண்டு. என் அம்மாவுடையதும் கூட!" என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி தனது ட்விட்டர் பக்கத்தில்,“மோடியின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார். நடிகர் சோனு சூட், “மதிப்பிற்குரிய மோடி ஜி, தாய் எங்கும் செல்வதில்லை. தன் மகன் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக கடவுளின் காலடியில் அமர்ந்திருக்கிறார். அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்