அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த ஜி.பி.முத்து 

By செய்திப்பிரிவு

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்த அனுபவத்தை பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து பகிர்ந்துள்ளார்.

தனது வீடியோக்கள் மூலம் கவனம் பெற்றவர் ஜி.பி.முத்து. சன்னி லியோன், சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் இவர் நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளேன். நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். இது என்னுடைய முதல் படம். உங்களின் ஆதரவு எனக்குத் தேவை. உங்களின் ஆசைப்படி நான் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க எனக்கு வாயப்பு கிடைத்துள்ளது.

படத்தில் நடிக்க பயமாக இருந்தது. அது செல்போனில் நடிப்பது போல அல்ல. கேமராவுக்கு முன்னால் நடித்தது கூச்சமாக இருந்தது. இயக்குநர் எனக்கு துணையாக இருந்தார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறதே? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆம் நடித்திருக்கிறேன். ஆனால், அஜித்தை நான் பார்க்கவில்லை. அடுத்து அவருடன் நடிக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களில் எது பார்ப்பீங்கள்? என கேட்டபோது, ‘இரண்டு படங்களையும் பார்ப்பேன். சென்டிமென்ட் ரீதியாக என்ன கவர்ந்தது அஜித்தின் படங்கள்தான். ‘விஸ்வாசம்’ எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ‘துணிவு’ பார்த்த பிறகு ‘வாரிசு’ படம் பார்ப்பேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்