மே 12-ல் வெளியாகிறது வெங்கட்பிரபு - நாக சைதான்யாவின் ‘கஸ்டடி’

By செய்திப்பிரிவு

நாக சைதன்யா, வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான 'கஸ்டடி' உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கும் படம் ‘கஸ்டடி’. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. அரவிந்த்சாமி படத்தில் வில்லனாக நடிக்க ப்ரியாமணி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இப்படத்தில் நாக சைதன்யா காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்