விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

அதேநேரம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் வெளிப்படுத்தினார். அநேகமாக அது விஜய் படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய்யை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒருபடம் இயக்க பேச்சுவார்த்தை நடந்து பின்னர் அது டிராப் ஆனது. அதன்பின் இருவரும் இணைவது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்