வசூலில் முன்னேறும் ரவி தேஜாவின் ‘தமாகா’ - பின்தங்கும் ரன்வீர் சிங்கின் ‘சர்க்கஸ்’ 

By செய்திப்பிரிவு

ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தமாகா’ திரைப்படம் ஆர்ப்பாட்டமில்லாமல் வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா இரட்டை வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘தமாகா’ (Dhamaka). ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, ஜெயராம், சச்சின் கெடேகர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம், கிறிஸ்துமஸையொட்டிய கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் நாள் படம் ரூ.10 கோடி அளவில் வசூலித்த இப்படம் கிறிஸ்துமஸ் நாளான நேற்று படம் ரூ.9 கோடி அளவில் வசூலித்துள்ளது.

அதேசமயம் ரூ.100-க்கும் அதிகமான பட்ஜெட்டில் பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான ‘சர்க்கஸ்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.20 கோடிக்கும் குறைவான வசூலை எட்டி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE