ஆசியாவில் முதன்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீன்’ எனும் புதிய முயற்சியில் உருவாகியுள்ள ‘பிகினிங்’ திரைப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெஃப்டி மேனுவல் கிரியேஷ் தயாரிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் ‘திருப்பதி ப்ரதர்ஸ்’ நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ‘பிகினிங்’. இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஆசியாவில் முதல்முறையாக ஸ்பிலிட் ஸ்கிரீனில் இரண்டு கதைகளை காட்சிப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில், வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
திரையின் இடதுபக்கம் ஒரு கதையும், வலதுபக்கம் மற்றொரு கதையுமாக இரண்டு படங்களாக விரியும் இப்படம் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தாது, மாறாக முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும் என படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார். பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இப்படம் அண்மையில் நடந்து முடிந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இந்நிலையில், படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» Main Atal Hoon - வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» ‘அவதார் 2’ படத்தின் வசூல் | இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago