துணிந்தால் வெற்றி நமதே - அஜித்தின் துணிவு பட ‘கேங்க்ஸ்டா’ பாடல் எப்படி?

By செய்திப்பிரிவு

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ''கேங்ஸ்டா'' வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து உலக அளவில் இந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மூன்று தினங்கள் முன் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதனிடையே, இப்படத்தின் ''கேங்ஸ்டா'' என்னும் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் ஷபீர் சுல்தானுடன் இணைந்து அவரே ‘கேங்க்ஸ்டா’ பாடலையும் பாடியுள்ளார். ஷபீர் சுல்தான், விவேகா இணைந்து பாடலை எழுதியுள்ளனர். ‘நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன்; கடைசி நிமிடம் வரை கர்ம கொடுப்பவன்’, ‘துணிந்தால் வெற்றி நமதே’ வரிகள் கவனம் பெறுகின்றன. பாடலில் 1.40 நிமிடங்களில் வரும் இசை கூஸ்பம்ஸ் தருணங்களுக்கு உத்தரவாதம். 3.31 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடல் ராப் கலந்து ஈர்க்கும் வரிகளுடன் இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்