இந்த ஆண்டில் கற்றுக்கொண்ட 2 முக்கிய விஷயங்கள் - மஞ்சிமா மோகன் ஷேரிங்க்ஸ்

By செய்திப்பிரிவு

உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு யாரும் நிற்கமாட்டார்கள், உங்களை முதன்மைப்படுத்த வெட்கப்படாதீர்கள் எனும் இரண்டு முக்கியமான விஷயங்களை இந்த ஆண்டு தான் கற்றுக்கொண்டதாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில், இந்த ஆண்டு தனக்கு கொடுத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ளார். அதில், 2022-ம் ஆண்டு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்ததாகவும், இரண்டு முக்கியமான விஷயங்களை இந்தாண்டில் தான் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். “இந்த ஆண்டு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்த வரும் முழுவதும் கற்றுகொண்டிருந்தேன். ‘உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு யாரும் நிற்கமாட்டார்கள்’ என்ற முக்கியமான பாடத்தை இந்த ஆண்டில் கற்றுக்கொண்டேன். அது நிச்சயமாக மற்ற எல்லாவற்றிற்கும் அடித்தளம். இதேபோல், உங்களை நேசிக்க ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்; உங்களை முதன்மைப்படுத்த வெட்கப்படாதீர்கள் என்பதையும் இந்த ஆண்டில் கற்றுக்கொண்டேன்.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதி எனக்கு சாகசம் நிறைந்ததாக இருந்தது. என்னுடைய உற்ற நண்பரை திருமணம் செய்துகொண்டேன். இந்த ஆண்டு மற்றொரு படி முன்னேறியுள்ளேன். பாதுகாப்பாகவும், திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்! ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஒரு வாய்ப்பு! மேலும் இந்த ஆண்டு நான் அதை முயற்சி செய்து என்னை நம்பினேன், இது நான் எடுத்த சிறந்த முடிவு. டீயர் 2022 அன்பாக இருப்பதற்கு நன்றி! 2023-ம் ஆண்டின் சாகசம் தொடங்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்