மிக நல்லதும் ரொம்ப கெட்டதுமாக இந்த வருடம் தனக்கு இருந்திருக்கிறது என நடிகை லைலா தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு நடிகை லைலா இந்த வருடம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டு எப்படி அமைந்திருக்கிறது என்பது குறித்து அவர் பேசுகையில், “நல்ல விஷயங்கள் போலவே சில கெட்ட விஷயங்களையும் இந்த வருடம் கொடுத்திருக்கிறது. 'சர்தார்' மற்றும் 'வதந்தி' வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறேன். ஆனால், என் அம்மா இந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து தவறிவிட்டார். அதனால், மிக நல்லதும் ரொம்ப கெட்டதுமாக இந்த வருடம் எனக்கு அமைந்திருக்கிறது.
சினிமாவில் கம்பேக் கொடுத்த போது ரசிகர்களிடம் இருந்து அதே அன்பு மீண்டும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை இயக்குநர் மித்ரனிடம் சொன்னபோது, “நிச்சயம் மீண்டும் உங்களை வரவேற்பார்கள் என்று எனக்கே தெரியும். ஏன் உங்களுக்குத் தெரியவில்லை” எனக் கேட்டுச் சிரித்தார்.
'வதந்தி' தொடரில் டீன் ஏஜ் பொண்ணுக்கு அம்மாவாக நடிக்க முதலில் எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்காக ஒப்புக்கொண்டேன். எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிறிஸ்துமஸ் விழாவை வழக்கம்போல குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். பிறக்கும் வருடத்தில் இன்னும் நிறைய படங்கள் மூலம் உங்களைச் சந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago