மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மம்முட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கேரள திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ‘சுருளி’ என்ற படத்தை வெறும் 19 நாட்களில் எடுத்து முடித்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை லிஜோ ஜோஸ் இயக்கியுள்ளார். இந்த இருமொழிப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அண்மையில் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

திருக்குறளுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லரின் பெரும்பகுதி தமிழ் மொழி வசனங்களாலேயே நிரம்பியிருக்கிறது. மிகவும் யதார்த்த கதைக்களத்துடன் சாமானிய கதாபாத்திரங்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வரும் ரெட்ரோ வகை இசை ஈர்க்கிறது. மம்முட்டிக்கு வைக்கப்படும் க்ளோசப் ஷாட்கள் கவனம் பெறுகின்றன. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

9 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்