‘வாரிசு’ க்ளைமாக்ஸில் விஜய்யின் நடிப்பு... - சிலாகித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

By செய்திப்பிரிவு

க்ளைமாக்ஸில் விஜய்யின் நடிப்பால் நீங்கள் எமோஷனலாக திக்குமுக்காடிப்போவீர்கள். ‘வாரிசு’ வாழ்க்கை மீதான நேர்மறை எண்ணங்களை விதைக்கும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஷ்யாம், “குறிப்பிட்ட பட்ஜெட்டை விட படம் 15-20 கோடியை தாண்டியது. ஆனால் தில் ராஜு தமிழில் தனது முதல் படம் என்பதாலும், அதுவும் விஜய்யை வைத்தும் பிரமாண்ட படமாக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்” என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், “நான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வயதானால் பொதுவாக எல்லோருக்கும் அனுபவம் தான் வரும். ஆனால் விஜய்க்கு அழுகவும் வரும். உங்கள் அனைவரின் மத்தியிலும் இப்போது சொல்கிறேன்... நான் விஜய் ரசிகன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நடிகராக விஜய்யின் அசுர வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. அவர் தனது ரசிகர்களுக்காக அனைத்தையும் செய்கிறார். விஜய் தனது படங்களின் வெற்றிக்கு தான் காரணம் இல்லை என்று கூறி அதன் கிரடிட்ஸை ரசிகர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.

க்ளைமாக்ஸில் விஜய்யின் நடிப்பால் நீங்கள் எமோஷனலாக திக்குமுக்காடிப்போவீர்கள். ‘வாரிசு’ வாழ்க்கை மீதான நேர்மறை எண்ணங்களை விதைக்கும். குறிப்பாக இந்தக் காலக்கட்ட இளைஞர்களுக்குத் தேவையான ஒரு படம்” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “சூரிய வம்சம் படத்தின் 175-வது நாளில் விஜய்தான் எதிர்கால சூப்பர் ஸ்டார் என நான் கூறியிருந்தேன். அப்போது நான் இதைக் கூறும்போது கலைஞர் கருணாநிதி ஆச்சரியமடைந்தார். இப்போது அது நிரூபணமாகியுள்ளது” என்றார்.

படத்தை வெளியிடும் 7ஸ்கீரின் ஸ்டூடியோவின் லலித் பேசுகையில், “கரோனா காலக்கட்டத்தில் 25 சதவீத திரையரங்குகள் மட்டுமே இயக்கிவந்தன. அப்போது எங்களுக்கு ஓடிடியிலிருந்தெல்லாம் அழைப்புகள் வந்தன. ஆனால், விஜய் திரையரங்கு உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அப்படித்தான் ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் வெளியான ஹிட்டடித்தது. விஜய் சினிமா வரலாற்றில் ‘வாரிசு’ மிகப்பெரிய அளவிலான ரிலீஸாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE