நெட்டிசன்கள் கவனம் ஈர்த்த ஹன்சிகாவின் ‘காந்தாரி’ முதல் பார்வை

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ‘காந்தாரி’ படத்தின் முதல் பார்வை வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே மிர்ச்சி சிவா நடிக்கும் ‘காசே தான் கடவுளடா’ படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் அடுத்தாக ஹன்சிகாவை வைத்து ‘காந்தாரி’ என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதையை தொல்காப்பியன் எழுத, திரைக்கதையை தனஞ்செயன் எழுதி உள்ளார். ஹன்சிகா இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மயில்சாமி, தலைவாசல் விஜய், 'ஆடுகளம்' நரேன், பிரிஜிதா, பவன், உள்பட பலர் நடிக்கிறார்கள். முத்து கணேஷ் இசை அமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், ஹன்சிகா ஆக்ரோஷத்துடன் காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தின் முதல் பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த ‘காந்தாரா’ படத்திற்கு போட்டியாக ‘காந்தாரி’ என பெயரிட்டப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்