CIFF 2022 | ‘தி கிளாஸ்ரூம்’ முதல் ‘விக்டிம்’ வரை: டிச.22-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

By பால்நிலவன்

The Glass Room (Das Glaszimmer) | Dir: Christian Lerch | Germany | 2020 | 93' | WC - Santham | 12.30: இரண்டாம் உலகப்போரைப் பற்றி நிறைய படங்கள் வந்த வண்ணம் உள்ளன. பதைபதைக்கும் உண்மைகளை அப்படங்கள் வெளிப்படுத்தியவண்ணம் உள்ளன. இதோ இன்னுமொரு கதை. இந்தப் படம் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள அழகிய சின்னஞ்சிறு கிராமத்தில் நடக்கிற சம்பவங்கள். 1945, போர் முடிவதற்கு சற்று முந்தைய காலகாட்டம். மொத்தப் படமும் சிறுவன் 11 வயது ஃபெலிக்ஸ் கண்ணோட்டம், கண்பார்வையில்தான் நடக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் அவன் தந்தை இறந்ததை தாய் அன்னா சொல்லி கேள்விபடும் நிலையில்தான் அவனது விவரம் இருந்தது. பவேரியா மாகாண தலைநகரமான முனிச் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. அவனது தாய் அன்னா அங்கிருந்து தப்பி லோயர் பவேரியாவின் தனது சொந்த கிராமத்திற்கு அவனை அழைத்து வருகிறாள். அங்கு அவர்களுக்கு பல சோதனைகள் காத்திருந்தன.

உள்ளூர் நாஜி முதலாளி ஒருவரின் மகன் கர்ரியுடன் பெலிக்ஸ் பழகத் தொடங்குகிறான். மெள்ள மெள்ள நாஜி பிரச்சாரம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பெலிக்ஸ் சிந்தனையைமாற்ற முயற்சிக்கின்றனர். அன்னாவும் நேஷனல் சோஷலிஸ்ட் சொல்லிக் கொள்வதில் அவருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பெலிக்ஸ் ஒருநாள், தனது புதிய வீட்டில் பளபளப்பான 'கண்ணாடி அறை' ஒன்று இருப்பதை காண்கிறான். சில பொய்யான வேஷங்கள் கலைவதையும் காண்கிறான். அத்துடன் போரின் அநீதிகளையும் பெலிக்ஸ் உணர்கிறான். அதன்பிறகுதான் எந்த சித்தாந்தத்தையும் விட குடும்பமும் நட்பும் முக்கியம் என்பதை உணர்கிறான். இத்திரைப்படம் திரைக்கதை எழுத்தாளர் ஜோசப் ஐன்வாங்கரின் சிறுவயது நினைவுகளை அடிப்படையாகக் கொண்டது.

The Gravedigger'sWife (LaFemmedufossoyeur) | Dir:KhadarAyderusAhmed | France,Somalia,Finland, Germany,Qatar | 2021 |82' |WC - Santham | 10.15 AM: சோமாலியாவின் மக்கள் வாழ்க்கையில் வறுமை உண்டு, ஆனால் வாட்டம் இல்லை; ஆடு மேய்த்து பிழைக்கும் அன்றாட ஜீவனத்தில் அவர்கள் கண்டது அன்பான உறவுகள், அரவணைப்பான குடும்பம், எங்கோ ஒரு காதல் என்று திகட்ட திகட்ட அழகாக சொல்கிறது 'கிரேவ்டிக்கர் ஓய்ப்' திரைப்படம். காதலித்த காரணத்திற்காக ஊரைவிட்டு தப்பித்து நகருக்கு எதாவது பிழைப்பு பார்க்கலாம் என வந்து சேர்கிறார்கள் அப்டி என்ற இளைஞனும் வார்சேம் என்ற பெண்ணும். ஊரார் பார்வையில் பொறுத்தவரை அவர்கள் ஊரைவிட்டு ஓடிப் போனவர்கள். வார்சேமுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வரையிலுமே திரைப்படம் ஒரு அற்புதமான ஆப்பிரிக்க அனுபவத்தை தருகிறது. மனைவியின் மாற்று அறுவை சிகிச்சைக்காக 5 ஆயிரம் டாலர்கள் தேவை. ஊரிலுள்ள தனது பங்காக சிறு சொத்தை விற்று பணம் பெற்றுவந்து சிகிச்சையை முடிக்கலாம் என ஊருக்கு செல்பவர் அங்கே இவரைச் சுற்றத்தார்.

இந்த மாதிரி நேரத்தில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தால்... மகனாக வரும் சிறுவன் இப்ராஹிம் பெற்றோரின் ஏழ்மை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவற்றை கேள்வியெழுப்புபவனாக இருக்கிறான். ஒரு சிக்கலான நடிப்பில் படத்திற்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கிறான்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் கூறுகையில், ''எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மரணத்தை வைத்துதான் இப்படத்தை நான் எடுத்துள்ளேன். சோமாலியாவில் மருத்துவமனையில் இறந்த ஒருவரை புதைக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் குடும்பத்தில் இறுதிச்சடங்கு அவ்வளவு சாதாரணம் இல்லையே என்று நாங்கள் மிகவும் யோசித்த போது ஒருவர் சொன்னார், கஷ்டமில்லை. எளிதாக முடிக்கலாம். வெளியே உடல்களை புதைப்பதற்காகவே சிலர் காத்திருக்கிறார்கள் என்றார். ஒரு இளைஞர் எந்த பிரச்சினையுமின்றி எங்களுக்கு உதவி செய்தார். உரிய சம்பிரதாயங்களோடு கல்லறைக் குழியை தோண்டுவதன்மூலம் தன் வாழ்க்கையை ஓட்டும் அவர்களைப் பற்றி வெளிஉலகிற்குசொல்ல வேண்டும் என நினைத்தேன் அதன் கதைதான் இது'' என்றார். கிளாஸ்கோ திரைப்படவிழாவில் பிரிமியர் காட்சியாக திரையிடப்பட்ட இப்படம் உலகம் முழுவம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Vanishing (Matin Calme) Dir: Denis Dercourt | France, Korea (South) | 2021 | 87' | WC - Seasons | 3.00 PM: கொரியாவில் ஒரு நாள், கடுமையாக சேதமடைந்த மற்றும் இன்னார் என அடையாளம் தெரியாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜின்-ஹோ, இந்த வழக்கின் பொறுப்பாளரான துப்பறியும் நபர், சடலத்தின் அடையாளத்தைக் கண்டறிய சர்வதேச தடயவியல் விஞ்ஞானியான ஆலீஸ் லானி என்பவரிடம் ஆலோசனை பெறுகிறார். அவர் இதற்காக வென்றே பிரான்ஸிலிருந்து வரவழைக்கப்பட்டவர். ஆனால் அவரையும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாக ஒரு கூட்டம் வேட்டையாட வருகிறது.

எல்லாம் தெரிந்தும் எந்தவித அச்சமும் இன்றி பணியாற்றுகிறார். அவர் இந்த கொலைக்கு பின் காணாமல் போன தடயங்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டெடுக்கிறார், இந்தக் கொலைக்கு பின்னால் மிகப்பெரிய நெட்ஒர்க் நடந்திருப்பது தெரிகிறது. மேலும் ஜின்-ஹோ இது ஒரு கொலை வழக்கு மட்டுமல்ல, உடல்உறுப்புகள் கடத்தல் செய்யும் அமைப்புடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்கான துப்புகளை கண்டறிகிறார்.

இந்த வழக்கின் உண்மையை வெளிக்கொணர, ஒரு சர்வதேச குற்றவியல் அமைப்பின் அடையாளத்தை எதிர்கொள்ள இரண்டு பேர் ஒன்றாக வேலை செய்கிறார்கள், மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான சம்பவத்தின் உண்மை வெளிப்படுகிறது. இந்த உலகத்தில் எந்த ஒரு தீவிரமாமன விஷயமும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் எதாவது ஒரு காரணத்திற்காக என்பதை பீட்டர் மே என்ற நாவலாசிரியரின் கதையைஅடிப்படையாகக்கொண்ட இந்த கொரிய திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக சொல்லிலியிருக்கிறார் பிரெஞ்சு இயக்குநர் டென்னிஸ் டெர்கோர்ட்.

Victim (Obet) | Dir: Michal Blasko | Slovakia, Czech Republic, Germany | 2022 | 91' | WC - Anna | 1.00 PM: இரினா தனது மகன் இகோருடன் ஒரு சிறிய செக் எல்லை நகரத்தில் வசிக்கிறார். மகன் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரன் என்று நம்பும் தாய் இரினா அவன் ஆபத்தான பாதைகளில் செல்கிறான் என்பதை அறிகிறாள். மகனை மீட்டெடுக்க போராடுகிறாள். செக் குடியுரிமை பெற வேண்டும் என்பதுதான் இரினாவின் ஆசை.

ஒருநாள் புலம்பெயர்ந்த நாடோடியான மூன்று ரோமாக்கள் இகோரைத் தாக்கியதாக தாய் கேள்விப்படுகிறார், அவருடைய உலகமே நொறுங்கிவிட்டதான நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூன்று ரோமா சிறுவர்களால் தாக்கப்பட்ட பிறகு. அவர் மருத்துவமனையை தேடிச் செல்கிறார். ​​இகோர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார், அவரால் பேசவும் முடியவில்லை.

விசாரிக்க வந்திருக்கும் போலீசார் கூட அவரை விசாரிக்கும் முன் சிகிச்சை முடியும்வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இகோருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, மேலும் அவர் மீண்டும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலப்போக்கில், இரினா தனது மகனின் பாதையில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறியத் தொடங்குகிறார். புலம்பெயர்தல், குடியுரிமை, வெளிநாடுகளில் உரிய ஆவணங்கள்இன்றி தங்கியிருத்தல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களை மட்டுமல்ல அலைக்கழிக்கப்படும் மனிதர்களின் பாடுகளையும் இப்படம் பேசுகிறது.

No Bears (No Bears) Dir: Jafar Panahi | Iran, Azerbaijan | 2022 | 106' | WC - Sathyam - 6.00 PM | Anna Cinema - 6.30 PM | ஜாபர் பனாஹி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் ஈரானிய திரைப்பட இயக்குனர். ஈரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. அவருடைய படைப்புகள் புரட்சிகர கருத்துகளைக் கொண்டிருந்ததாக ஈரானிய அரசு அவருக்கு தடைவிதித்தது.

பல ஆண்டுகள வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதனை மீறி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவர் டாக்ஸி என்ற படத்தை எடுத்தார். அது எப்படியெனில் டாக்ஸியைவிட்டு இறங்காமலேயே, மொத்த படத்திலும் காரை ஓட்டியவண்ணம் செல்லும் டாக்ஸி டிரைவராக ஜாபர் பனாஹி தோன்றிய அந்தப் படம் உலகம் வியந்து பார்த்தது.

கரோனாவுக்கு பிறகு அவர்மீதான கட்டுத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அந்த சுதந்திரத்தில் தற்போது ஈரான் துருக்கி எல்லையில் எடுக்கபபட்ட படம்தான் நோ பியர்ஸ். இதிலும் ஒரு பெற்றோர்கள் எதிர்க்கும் ஒரு காதல் கதையை எல்லைப்பகுதியில் தான் காண்பதாக எடுத்திருக்கிறார். ஒரு முக்கியமான இயக்குநரின் திரைப்படம் நிறைவு நாள் திரைப்படமாக இருவேறு அரங்கங்களில் (சத்யம், அண்ணா) திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்