‘லத்தி’ முதல் ‘பாபிலோன்’ வரை - திரையரங்குகளில் இந்த வார ரிலீஸ் என்னென்ன?

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

லத்தி: வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘லத்தி’. சுனைனா, பிரபு, முனிஷ்காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸை முன்னிட்டு படம் நாளை (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகிறது.

கனெக்ட்: ‘மாயா’, ‘கேம் ஓவர்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘கனெக்ட்’. விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

காபா: (மலையாளம்) ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் படம் ‘காபா’ (Kaapa). இந்தப் படத்தில் ஆசீஃப் அலி, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, அன்னா பென் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படம் நாளை (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகிறது.

பாபிலோன்: (ஆங்கிலம்): டேமியன் சாசெல்லி இயக்கத்தில் பிராட் பிட், மார்கோட் ராபி நடித்திருக்கும் ஹாலிவுட் படம் ‘பாபிலோன்’. காமெடி ட்ராமாவாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்