கோபி நயினார் - ஆன்ட்ரியாவின் ‘மனுசி’ முதல் பார்வை வெளியீடு

By செய்திப்பிரிவு

இயக்குநர் கோபி இயக்கத்தில் ஆன்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இவர் அடுத்ததாக நடிகை ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘அனல் மேலே பனித்துளி’ படத்திற்கு பிறகு ஆன்ட்ரியா நடிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி இன்று படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பூட்டப்பட்ட ஓர் அறையிலிருந்து கதவின் வழியே நடிகை ஆன்ட்ரியா பார்க்கும் வகையிலும், அதே அறையில் ஆண் ஒருவரின் முன்னால் அவர் அமர்ந்திருக்கும் வகையிலும் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

வித்தியாசமான இந்த போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்