விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. இதனை நடிகர் சிலம்பரசன் பாடியிருந்தார்; விவேக் பாடலை எழுதியிருந்தார்.
» நாடாளுமன்றத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்புக்கு அனுமதி கோரிய கங்கனா ரனாவத்
» உலகம் முழுக்க ரூ. 3,500 கோடி; இந்தியாவில் ரூ. 160 கோடி - மாஸ் காட்டும் ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’
இந்நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இட்ஸ் ஃபார் யூ அம்மா’ எனவும், ‘சோல் ஆஃப் வாரிசு’ என குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலை விவேக் வரிகளில் கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார். சென்டிமென்டான பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago