நாடாளுமன்றத்தில் ‘எமர்ஜென்சி’ படத்தின் படப்பிடிப்பு நடத்த நடிகை கங்கனா ரனாவத் அனுமதி கோரியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். அத்துடன், படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ரித்தேஷ் ஷா. கடந்த ஜூலை 14-ம் தேதி படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தனது ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்காக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதிக்குமாறு மக்களவைச் செயலருக்கு படக்குழு சார்பில் கங்கனா கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக, நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தவோ, வீடியோ எடுக்கவோ தனியாருக்கு அனுமதி வழங்கப்படாத சூழலில், கங்கனாவின் இந்த அனுமதி கடிதம் பேசுபொருளாகியுள்ளது.
இதனிடையே, தமிழில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago