கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிவுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ (Oppenheimer) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் ‘தி டார்க் நைட் ரைசஸ்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘இன்செப்ஷன்’, ‘டன்க்ரிக்’, ‘டெனட்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். தற்போது அவர் அடுத்தாக இயக்கும் புதிய படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். இ

ந்தப் படத்தில் 'அயர்ன்மேன்' புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சிறப்பு என்னவென்றால், அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் மூலம் கொண்டுவருவதற்கு அதிக செலவானதால், அதற்கு பதிலாக அதனை மீட்டுருவாக்கம் செய்து காட்சிப்படுத்தியிருப்பதாக நோலன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - அணு ஆயுத சோதனையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் ட்ரெய்லர் முழுவதும் ஒருவித பதற்றம் பயத்துடனேயே பயணிக்கிறது. நடிகர் சிலியன் மர்பிக்கு வைக்கப்படும் க்ளோசப் ஷாட்ஸ்கள், முகபாவனைகள் படத்தின் சூட்டை ட்ரெய்லர் மூலம் உணர வைக்கிறது. விறுவிறுப்பும், பதற்றமும், பயத்தையும் கொண்ட அணு ஆயுத சோதனையை அதன் வீச்சு குறையாமல் நோலன் திரையில் காட்சிப்படுத்தியிருப்பதை மொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது. படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE