இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெயில்' படத்துக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்கியுள்ளார் வசந்தபாலன். இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமல் முழுக்க படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தியது படக்குழு. கடந்த செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் தலைப்பை வெளியிடப்பட்டது. மேலும், தலைப்பை அறிவிக்கும் வகையில் படத்தின் சிறிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டது படக்குழு. ‘அநீதி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago