அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Chilla Chilla’ சில நாட்கள் முன் வெளியானது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை 'காக்கா கதை கேட்டிருக்கேன்' பாடல் புகழ் வைஷாக் எழுதியுள்ளார்.
யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. தற்போது படக்குழு இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, "காசேதான் கடவுளடா" என்ற அந்தப் பாடல் நாளை இரண்டு மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், "பணம், பணம் பணம்!! இது அனைத்தும் பணத்தைப் பற்றியது" என்று பற்ற வைத்துள்ளார்.
இதையடுத்து இந்த அப்டேட்டை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
» திரைப் பார்வை | அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - சூழலியல் அற சிந்தனையை விதைக்கும் சுவாரசிய சினிமா
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago