The Taste of Apples is Red | Dir: Ehab Tarabieh | Israel, Germany | 2022 | 83' | WC | Venue: 6 Degrees - 9.15 am: சிரியாவின் எல்லையில் இன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதி கொஞ்சம் உள்ளது. அத்தகைய கோலன் மலைப்பகுதிகளில்தான் திரைப்படம் மையம் கொள்கிறது. அப்பகுதியில் மக்கள் ஒரு காலத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்கள். பின்னர் இஸ்லாத்திலிருந்து பிரிந்து ட்ரூஸ் என தங்களை அழைத்துக்கொண்டு புதிய மதம் ஒன்றை சொந்தமாக ஸ்தாபித்துக்கொண்டார்கள். அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் இஹாப் தாராபீஹ்.
சிரியா அரசுடனான சிறப்பு ஏற்பாட்டின் மூலம் டிரூஸ் சிறுபான்மையினர் கோலன் குன்று பிராந்தியத்தில் இன்னமும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அரபு இஸ்ரேலிய போரின்போது அங்கிருந்து நாடுகடத்தப்பட்டவரான ஷேக் கமெல் என்ற மதத் தலைவர் ஊர் திரும்பியதன் விளைவுகளை மிகவும் எச்சரிக்கையாக அதேநேரம் நிலப்பரப்பு வாழ்வின் நியாயங்களோடு எடுத்துப் பேசியுள்ளார் சிரியாவின் இயக்குநர் இஹாப் தாராபீஹ்வின். உள் நாட்டுப் போர் ஒன்றின் காரணமாக ஷேக் கமெல் சிரியாவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை அமைதியாக கடந்து வருகிறார்.
கோலன் குன்றுகளில்தான் அவரை மரியாதையாக நடத்தும் ட்ரூஸ் சமூகம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சொந்த ஊர்ப் பகுதியான கோலன் மலைப்பகுதிகளுக்கு திரும்பி சகோதரர் முஸ்தபாவை சந்திக்கிறார். தனது சகோதரரை இரவில் யாருக்கும் வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் உறங்க வைக்கிறார். அப்போது அங்கு வந்து பார்க்கும் அவரது மகள் தூங்கிக்கொண்டிருக்கம் அவரது சட்டையை நீக்கி வயிற்றுப்பகுதியை தடவிப் பார்க்கிறார். ஏற்கெனவே குண்டடிப்பட்ட காயத்திற்கு ஷேக் கமெல் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டறிகிறாள். அவரது மற்ற உறவுகளும் அங்குதான் இருந்தாலும் மக்களை உங்கள் வருகையை விரும்ப மாட்டார்கள் என சகோதரர் கூறுகிறார். காரணம் அங்கு எல்லைப் பகுதியில் அவ்வப்போது பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதுதான். ஒரு கடந்த கால வாழ்க்கையை நிகழ்காலத்தின் பிரச்சினைகள் பலவற்றையும் இத்திரைப்படம் மீண்டும் கண்முன் கொண்டுவருகிறது.
» ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோரின் ‘கலியுகம்’ பட முதல் பார்வை வெளியீடு
» “பதவியைப் பயன்படுத்தி மக்கள் சேவை செய்யுங்கள்” - உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து
Lord of the Ants /(II Signore delle formiche) | Dir: Gianni Amelio | Italy 2022 | 134' | WC | Venue: Anna Cinema - 10.00 am: எண்டமாலோஜி என்பது பூச்சியியல் என்று நாம் அறிவோம். அதில் ஒரு பிரிவுதான் மிர்மெகாலஜி, அதாவது எறும்புயியல். எறும்புயியலில் நிபுணத்துவம் பெற்றவர் இத்தாலியைச் சேர்ந்த ஆல்டோ பிராய்பாந்தி. ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த ஆல்டோ பிராய்பாந்தி என்பவரின் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை 'எறும்புகளின் கடவுள்' என்ற இந்தத் திரைப்படம் பேசுகிறது.
கட்டுரையாசியராக, திரைக்கதை எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, இயக்குநராக, இலக்கியகர்த்தாவாகவும் திகழ்ந்த பிராய்பாந்தி ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர். அவர் யாருடன் தனது நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருக்கிறாரோ அவரின் தந்தையே அரசுக்கு தகவல் தெரிவித்துவிடுகிறார். ஒரு அப்பாவியை தார்மிக ரீதியாக வழிதவறச் செய்வது ஒரு குற்றமாகும் எனக் கூறி நீதிமன்றத்திலும் பிராய்பாந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.
இத்தாலியில் 1968களில் பாசிசம் மக்களை கடுமையாக வதைத்துக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால் அவருக்கு கடும் சிறைதண்டனை கிடைக்கிறது. ஒரு பிரபல மனிதரின் பயோபிக் என்றவகையில் அன்றைய அரசியல் வாழ்க்கையோடு, அக்கால கட்ட மக்கள் வாழ்க்கையையும் மிகச்சிறந்த அழகியல் தன்மையோடு எடுத்துச் சொன்ன விதத்தில் உன்னதமான ஆக்கமொன்றை இயக்குநர் ஜியானி அமெலியோ தந்திருக்கிறார்.
A Man / (Aru otoko) | Dir: Kei Ishikawa | Japan | 2022 | 121 | WC | Venue: Six Digrees - 3.00 PM: வழக்கறிஞராக பணிபுரியும் அகிராவுக்கு ஒரு வித்தியசானமான பணி காத்திருக்கிறது. ஒரு நாள், அவர் காரில் வந்துகொண்டிருக்கும் போது அவரது வாடிக்கையாளரான ரீ என்ற பெண்மணியை சந்திக்கிறார். ஒரு விபத்தில் மறைந்த தனது கணவரான டெய்சுகே பின்னணி குறித்து கொஞ்சம் ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துத் தரும்படி அகிராவிடம் அவள் கேட்டுக்கொள்கிறாள்.
ரீ ஒரு சிறிய நகர ஸ்டேஷனரி கடையில் எழுத்தராக இருப்பவர், விபத்தில் பலியான கூச்ச சுபாவமுள்ள டெய்சுகே உடன் நட்பு கொண்டிருந்த காலங்களில் அவர் தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை செய்தவர். தனது இளம் மகளின் இழப்பிற்காக இன்னும் துக்கத்தில் இருக்கும் ரீ, டெய்சுக்கில் இதேபோன்ற வலியையும் தனிமையையும் உணர்கிறார் - மேலும் அவர்கள் காதலர்களாக மாறுகிறார்கள், பின்னர் கணவன் மனைவியாகிறார்கள். டெய்சுக் ஒரு விபத்தில் உயிரிழக்கிறான். முதல்பாதி இப்படி தொடங்கும் எ மேன் திரைப்படம் பின்பாதியில் அப்படியே புரட்டி போடுகிறது.
ரீ-டெய்சுக்கே தம்பதியினர் தங்கள் கைக்குழந்தை மற்றும் ரீயின் முந்தைய திருமணத்திற்கு பிறகு இரண்டாவது காதலில், மரணம் தலையிடும் வரை ரீயின் பூர்வீக மகனுடன் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ரீ வழக்கறிஞர் கிடோவுடன் ஆலோசித்தபின்னர், தற்போது இறந்துவிட்ட டெய்சுக்கின் விவகாரங்களைக் கையாள்வதில், அதிர்ச்சியூட்டும் செய்தியுடன் அவர் மீண்டும் அவளிடம் வருகிறார்.
வாழ்வின் புதிர் பாதைகளில் கண்டுபிடிக்க முடியாத உண்மைகளை சிறுசிறு ஆப்பிள் துண்டுகளாக சீவித்தருவதில் பெயரபெற்றவர் கீச்சிரோ ஹிரானோ என்ற ஜப்பானிய நாவலாசிரியர். இவரது 'அரு ஒட்டாக்கோ' என்ற நாவலும் அப்படியான ஒரு புதிர் பாதையைக் கொண்டிருப்பதுதான். இயக்குநர் கெய்ஷி இசிகாவா. மேலும் 2021 ஜனவரி 25ல் தொடங்கி 2021 மார்ச் 1க்குள் அதாவது 36 நாட்களுக்குள் இத்திரைப்படம் எடுத்து முடித்திருக்கிறார் அவர். படம் (நவம்பர் 18,2022) வெளியாகி ஒரு மாதம் ஆகியிராத சூட்டோடு ஜப்பானிய வாசத்தின் அதன் ஈரம் வற்றாமல் சென்னை திரைப்படவிழாவில் வெளியாகிறது எ மேன் திரைப்படம்.
Under the Fig Trees/ (under the fig trees) | Dir: Erige Sehiri | Tunisia, | 2022 | 92' WC | Venue: Seren - 10.15: வடமேற்கு துனிசியாவின் ஒரு கோடைக்காலம். கிராமப்புறங்களில் உள்ள அத்திப்பழ அறுவடையில் ஈடுபடுவதற்கா பெண்களும் ஆண்களுமாக திறந்த ட்ரக்கில் தினம் தினம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் விதமாக இந்தப் பணி அவர்களுக்கு உதவுகிறது. மெலக் மற்றும் அவரது நண்பர்கள் கோடை காலத்தில் பழத்தோட்டங்களில் தங்களுடைய படிப்புக்கு பணம் செலுத்தவும், அவர்களது திருமணத்திற்கு தயாராகவும் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு உதவவும் வேலை செய்கிறார்கள்.
அதேநேரம் அறுவடையில் பணிபுரியும் இளம் பெண்களும் ஆண்களும் புதிய உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறார்கள், மிகவும் நெருக்கமான பரிமாற்றங்களின் அடிப்படையில், நட்பு அல்லது காதல் உறவுகள் என்றும் உருவாகின்றன. அத்திப்பழம் உணர்ச்சிகளின் உண்மையான அரங்கமாக மாறுகிறது, இயக்குநர் எரிக் செஹ்ரியின் கைவண்ணத்தில் எளிய மனிதர்களின் வேலை, அன்பு, நட்பு மற்றும் நிலம் ஆகியவற்றுடனான உறவுகளாக திரைப்படம் ஒரு புதிய வாழ்வியலை நம் கண்முன் வைத்துள்ளார். சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான 95வது ஆஸ்கர் அகாடமிக்காக துனிசிய நாட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அண்டர் தி ஃபிக் ட்ரீஸ்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago