ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோரின் ‘கலியுகம்’ பட முதல் பார்வை வெளியீடு

By செய்திப்பிரிவு

ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ப்ரைம் சினிமாஸ், ஆர்.கே.இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலியுகம்’. இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரமோத் சுந்தர் பேசுகையில், “ உலகப் போருக்கு பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 'கலியுகம்' விவரிக்கிறது. போரின் பின் விளைவுகள் மற்றும் இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கவிருக்கும் இழப்புகள் உள்ளிட்ட பல சமகால நெருக்கடிகளும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்