மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட கூட்டணி - ஆதி நடிக்கும் ‘சப்தம்’ 

By செய்திப்பிரிவு

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படமான ‘சப்தம்’ படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மூலம் ‘ஈரம்’ பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘ஈரம்’. அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி கூட்டணி புதிய படம் ஒன்றின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப்படத்திற்கு ‘சப்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஈரம்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குநர் அறிவழகனே தயாரிக்கிறார். ‘ஈரம்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

‘சப்தம்’ படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள, நேற்று (டிசம்பர் 14, 2022 ) நடைபெற்றது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்