‘அடிக்கச் சொல்வது ஆர்டர் இல்லடா... ஆஃபர்’ - விஷாலின் ‘லத்தி’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘லத்தி’. வினோத்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சுனைனா, பிரபு, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால சுப்ரமணியெம், பாலகிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் வரும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - படத்தில் விஷால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட அதே வழக்கமான காவல் துறை படங்களுக்கான பாணியை இந்த ட்ரெய்லரிலும் உணர முடிகிறது. வில்லன் மகனை விஷால் கடத்திவிட, அதன் மூலம் பழிவாங்கும் படலம் தொடர்வதை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் லீடு கொடுக்கிறது. ஆனால், பார்த்துப் பழகிய இந்த வகையறாப் படங்களில் ட்ரெய்லரில் புதுமையை உணர முடியவில்லை. வழக்கமான திருடன் - போலீஸ் பாணி கதையில் காவல் துறையை ரொமான்டிஸைஸ் செய்யும் வசனங்களும், ‘உங்கள மாதிரி ஆளுங்கல, கைல லத்தி கொடுத்து அடிக்க சொன்னா அது எங்களுக்கு உயர் அதிகாரிகள் கொடுக்குற ஆர்டர் இல்லடா ஆஃபர்’ போன்ற காவல் துறை அதிகாரங்களுக்கு தீனியிடும் வசனங்கள் மிகை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்