ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்