கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக ‘ஜிகர்தண்டா 2’ படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு தினத்தன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்தாக ‘ஜிகர்தண்டா 2’ படத்தை இயக்க இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்ட போஸ்டரில் படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ஞ்ச் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் படத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago