ரூ.30 கோடியை கடக்கும் ‘கட்டா குஸ்தி’ வசூல்: விஷ்ணு விஷால் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரூ.30 கோடி வசூலை கடக்கப் போகிறது என நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்சுமி நடிப்பில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “கன்டென்ட் சார்ந்த படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். கட்டா குஸ்தி படத்தின் முதல் நாள் வசூலிலிருந்து அடுத்தடுத்த நாள் வசூல் இரட்டை மடங்காக உயர்ந்தது. எஃப்ஐஆர்-க்கு பிறகு எனக்கு இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றிப் படம்.

என்னிடமிருந்த 9 படங்கள் என்னைவிட்டு சென்றன. நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று என் கையில் 9 படங்கள் இருக்கின்றன. ‘எஃப்ஐஆர்’ படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துவிட்டது. ரூ.30 கோடியை படம் கடக்கப்போகிறது. முன்னாள் பெண் கிரிக்கெட்டர் ஒருவரும் கூட என்னைத் தொடர்புகொண்டு பாராட்டினார். என்னை பொறுத்தவரை நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை” என்றார்.

அடுத்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் ட்ராமாவான இதில் கிரிக்கெட்டராக நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

24 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்